எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Friday, February 24, 2012

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மக்கள் நிதியுதவி

Print Friendly and PDF


(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது) 
தமிழகத்தை தாக்கிய ‘தானே’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று தலைமைச் செயலகத்தில் கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள்.


1. கோயம்புத்தூர், லஷ்மி மிஷின் ஓர்க்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு 1 கோடி ரூபாய்.
2. மெட்ராஸ் சிமெண்ட்  நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பி. ராமசுப்பிரமணிய ராஜா 1 கோடி ரூபாய்.
3. சென்னை, சமுதாய பவுண்டெஷன் நிர்வாக அறங்காவலரும், கர்நாடக இசைக்கலைஞருமான சுதா ரகுநாதன் 5 இலட்சம் ரூபாய்.
4. இந்திய தொழிற்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சார்பாக அதன் தமிழ்நாடு மாநில மன்றத்தின் தலைவர் என்.கே. ரங்கநாத் 31 இலட்சத்து 71 ஆயிரத்து 1 ரூபாய்.
5. கோயம்புத்தூர், சி.ஆர்.ஜி. குழுமத்தின் சார்பாக அதன் நிறுவனர் மற்றும் அறங்காவலர் டாக்டர் ஆர். நந்தினி 25 இலட்சம் ரூபாய்.


இன்று மட்டும் தமிழக முதலமைச்சரிடம் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக 2 கோடியே 61 இலட்சத்து 71 ஆயிரத்து ஒரு ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை வழங்கப்பட்ட தொகை 114 கோடியே 84 இலட்சத்து 21 ஆயிரத்து 776 ரூபாயாகும்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452