Published On: Sunday, February 19, 2012
அமலா பாலின் 3 படங்களும் புட்டுக்கிச்சு

இந்த வாரம் வெள்ளிக்கிழமை அமலா பால் நடித்த மூன்று படங்கள் வெளியாகின. அமலா பாலைப் பொறுத்தவரை இது ரொம்ப ரொம்ப ஹேப்பியான சமாச்சாரம்.
ஆனால் படம் பார்த்தவர்களுக்கே மண்டைக் காய்ச்சல்.
அதர்வாவுடன் இவர் நடித்த படம் முப்பொழுதும் உன் கற்பனைகள் நேற்று பெரிய அளவில் வெளியானது. நம்பர் ஒன் டெக்னீஷியன்ஸ், நல்ல நிறுவனம், பிரமாண்ட தயாரிப்பு என அனைத்தும் இருந்தும், இந்தப் படம் ரசிகர்களைக் கொஞ்சம் குழப்பியடித்தது என்பதே உண்மை. நகர்ப்புறங்களிலேயே இந்த நிலை என்றால், இன்னும் மற்ற ஏரியாக்களில் எப்படியோ?
அடுத்து காதலில் சொதப்புவது எப்படி? - படத்தின் ரிசல்டையே தலைப்பாக வைத்த மாதிரி இருந்தது படம். சித்தார்த் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேறு.
இதே படம் தெலுங்கில் லவ் பெயிலியர் என்ற பெயரில் வெளியானது. அதுவும் நேற்றே வெளியாகிவிட்டது.
ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாவது இன்றைய நாட்களில் ஒரு ஹீரோயினுக்கு பெரிய விஷயம்தான். ஆனால் இந்தப் படங்களின் முடிவு, இனி இப்படி ஒரு வாய்ப்பு அமலாவுக்கு அமையுமா என கேட்க வைத்துவிட்டது!