Published On: Tuesday, February 07, 2012
கோச்சடையானில் கதாநாயகி கத்ரீனா அல்ல தீபிகா படுகோன்

'கோச்சடையான்' படம் வெறும் அனிமேஷன் என்பதைத் தாண்டி, புதிய தொழில்நுட்பத்துடன் ஒரு முழுமையான ரஜினி படமாக உருவெடுத்துள்ளது. 'கோச்சடையான்' படத்தில் சரத்குமார், சிநேகா, ஆதி, ஜாக்கி ஷெரஃப் என பாத்திரத்திங்களுக்கு ஏற்றவாறு நடிகர்களை ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். படத்தின் முதல் ஸ்டில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நாயகி யார் என்பது மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. பலகட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு இப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக கேத்ரினா கைஃப் இடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் 'ராணா' படத்தில் ரஜினிக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட தீபிகா படுகோன்' கோச்சடையான் ' படத்தின் நாயகியாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினி இன்று அறிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் இணையத்தில், 'தீபிகா படுகோன் கோச்சடையான் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சி' என்று தெரிவித்துள்ளார்.