Published On: Tuesday, February 07, 2012
அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி
(எம்.ரி.எம்.பாரிஸ்)
அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் 19ஆவது இல்லங்களுக்கிடையிலான மெய்வலுனர் திறனாய்வு போட்டி நேற்று பாடசாலையின் அதிபர் ஐ.எல். மஃறுப் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர், மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் யூ.எல் ஜெய்னுதீன், ஓட்டமாவடி கோட்ட கல்வி அதிகாரி எம்.சுபைர் ஓட்டமாவடி கோ.ப.மே. பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட், மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிமணையின் பாடசாலை வேலைகள் பரிசேதனை அதிகாரி ஐ.எல்.எம் றூஹுல்லாஹ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இணைப்பாளர் எஸ்.எம்.தௌபீக் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விளையாட்டுப்போட்டியில் நஜிமியா (பச்சை நிற) அணி 325 புள்ளிகளைப் பெற்று முதலாமிடமும், கமரியா (நீல நிற) அணி 297 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடமும், சம்சியா (சிவப்பு நிற) அணி 279 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றது. இந்நிகழ்வின் விசேட நிகழ்வாக கல்குடா கிராமிய கலை மன்றத்தின் கோலாட்ட நிகழ்வுகள் பெற்றோருக்கான போட்டி நிகழ்ச்சிகள், பழைய மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.