எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Monday, February 27, 2012

மனித உரிமை அபாண்ட குற்றச்சாட்டுககளை எதிர்த்து நாடெங்கும் இன்று கண்டன பேரணி

Print Friendly and PDF

இலங்கைக்கு எதிராக மனித உரிமை என்ற போர்வையில் ஜெனீவாவில் கொண்டுவரப்படவுள்ள அபாண்ட குற்றச்சாட்டுகள் அடங்கிய பிரேரணையை எதிர்த்து இன்று நாடு முழுவதிலும் மாபெரும் மக்கள் பேரணி இடம்பெறவுள்ளது.


அரசியல் இனம் மதம் என்ற சகல பேதங்களை மறந்து ஒரே நாடு என்ற மகுடத்தின் கீழ் நாட்டை பாதுகாக்கும் இந்த மாபெரும் மக்கள் பேரணியில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைவர்கள் நேற்று வேண்டுகோள் விடுத்தனர்.

கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்களான டியூ குணசேகர  வாசுதேவ நாணக்கார கீதாஞ் சன குணவர்தன  டலஸ் அழகப் பெரும  டிலான் பெரேரா மற்றும் மஹிந்தானந்த அலுத்கம ஆகியோர் இந்த பகிரங்க வேண்டு கோளை விடுத்தனர்.இதற்கமைய வடக்கு  கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் இந்த மக்கள் பேரணி இடம்பெறவுள்ளன.

கொழும்பு உட்பட 150 நகரங் களிலும் மிகப் பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ள இந்த மாபெரும் மக்கள் பேரணி யில் நாட்டின் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.பெளத்த இந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். 

இலங்கைக்கு எதிராக மனித உரிமை என்ற பெயரில் அமெரிக்காவின் பின்னணியில் ஐ. நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை எதிர்த்து தாய் நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன்வருமாறும் நேற்றை செய்தியாளர் மாநாட்டின்போது வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப் பெரும கருத்து தெரிவிக்கையில் இந்த மக்கள் பேரணியானது எதிர்க்கட்சி கூறுவது போன்று ஐ.நா. வுக்கு எதிரானதல்ல மாறாக அதன் கீழுள்ள சில குழுக்களால் முன்வைக்கப்படும் தீர்மானதிற்கு எதிரானதாகும்.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு முன்வைக்கப்படும் விடயங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன்  மக்களின் பலத்தை வெளிக்காண்பிப்பதே இதன் நோக்கமாகும்.

இலங்கைக்கு எதிராக இதுபோன்று பல தடவைகள் பல்வேறு அழுத்தங்கள் உபயோகிக்கப்பட்டன. ஆனால் அத்தனை சவால்களுக்கும் முகம் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூம் அவரது தலைமையிலான அரசாங்கமும் அவைகள் அனைத்தையும் வெற்றி கண்டது.பயங்கரவாதத்தை முறியடிக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் பல்வேறு கோணங்களில் மேற்கத்திய நாடுகள் அழுத்தங்களை பிரயோகித்தன.எனினும் அவற்றை ஜனாதிபதி பொருட்படுத்தவில்லை.

2005 ஆம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  பயங்கரவாதமற்ற நாட்டில் சுமுகமான முறையில் மக்கள் வாழும் நிலைமையை ஏற்படுத்துவேன் என்று கூறினார்.அந்த வாக்குறுதிகளை நிலைநாட்டும் வகையிலேயே சர்வதேச சக்திகளுக்கு அடிபணியாது பயங்கரவாதத்தை முற்றாக முறியடித்தார்.அதன் எதிரொலியே இந்த குற்றச்சாட்டுகளாகும்.

ஐ.நா. வுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் எந்தவித பாதிப்புகளும் இல்லை. பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டு- நாட்டில் சமாதானமும்  ஐக்கியமும் தற்போது காணப்படுகின்றது.அன்று ஏற்பட்ட காயங்கள் தற்போது தான் சுகமாகி வருகின்றன. இந்நிலையில் அதனை மீண்டும் தோண்டி எடுப்பதற்கு முற்படும் செயல் போன்றதொன்றே இவ்வாறான செயற்பாடுகள் என்றார்

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452