Published On: Monday, February 27, 2012
ஜெனிவா கூட்டத் தொடரின் இறுதி நேர நகர்வுகள்
(ஐ.எம்.பாயிஸ்)
சுவிச்சலந்தின் ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை தானே நேரடியாக முன்வைப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது.ஆரம்பத்தில் இவ் பிரேரணையை , கனடா அல்லது மேற்கு நாடு ஒன்று அல்லது ஆபிரிக்க அல்லது தென்னமெரிக்க நாடு கூட்டாகவோ தனியாகவோ கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தபோதும் இறுதியாக அமரிக்காவே கொண்டு வரும் என இப்போது தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்காவினால் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படும்போது பெரும்பாலான நாடுகள் அதனை ஆதரிக்கும் என அமெரிக்கா கருதுவதாக இலங்கை இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிப்பட்ட பின்னர் இலங்கைக்கு எதிராக இத்தகைய தீர்மானமொன்றை அமெரிக்காவின் ஆதரவுடன் கனடா கொண்டுவந்தது. எனினும் அதை பெரும்பான்மையான வாக்குகளால் அப்போது இலங்கை தோற்கடித்தது.
இம்முறை ,கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிகளை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிவிட்டது என்ற அடிப்படையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.எனினும் இந்த விடயமானது அக்கிரமமான, அத்துமீறல் எனக்கூறி இக்குற்றச்சாட்டை இலங்கை நிராகரித்துள்ளது.
பிரேரணை அனேகமாக நிறைவேறிவிடும் என்ற நிலையில், அதிலிருந்து தப்ப இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரத்தை விவாதிக்க வேண்டாம் என்றும் பதிலாக ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தினதும் மனித உரிமைகள் நிலையை மீளாய்வு செய்யும் கூட்டத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறுகையில் இலங்கை விவகாரத்தையும் விவாதிக்கலாம் என்றும் ஜெனிவாவில் உள்ள இலங்கைக் குழு கேட்டுள்ளது. இலங்கையின் இந்தக் கோரிக்கையை சாதகமாகப் பரிசீலிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு என்று ஐ.நா. மனித உரிமைகள் சபை அதிகாரிகள் கூறுகின்றனர்.
47 நாடுகளைக் கொண்ட மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்.தற்போதைய தகவல்களின் படி 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன.பிரிட்டன் மற்றும் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன அதேபோன்று ஆபிரிக்க நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவிக்க உள்ளன.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளிக்குமாறு ஏனைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கையில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் தனது தூதுவர்களை அமெரிக்கா ஈடுபடுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது .
இதே வேலை ஜெனீவா நகரிற்கு சென்றிருந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று ஆபிரிக்க நாடுகளுக்கான விசேட விஜயம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.மனிதவுரிமைகள் அமர்வை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 ஆபிரிக்க நாடுகளுடன் கலந்துரையாடுவதற்காகவே அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மனிதவுரிமைகள் அமர்வில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை முறியடிக்கும் வகையில் தமக்கு ஆதரவாக ஆபிரிக்க நாடுகள் செயற்பட வேண்டும் என அவர் கோருவதே இதன் நோக்கமாகும்,
இந்தநிலையில், இன்றையதினம் மனிதவுரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கை நேரப்படி, பிற்பகல் 3 .00 மணியளவில் நாட்டின் மனிதவுரிமைகள் தொடர்பான விளங்கங்களை ஆணைக்குழு அமர்வில் முன்வைக்கவுள்ளார்.
இக் கூட்டத்தொடரில் ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்து கொள்ளும் என முன் கூறப்பட்டது என்னினும் தற்போது நிலவும் நிலையற்ற நிலைமை தொடருமேயானால் அது வன்முறைக்கு வித்திடும். குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்வதாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 19 வது அமர்வு தொடர்பாக அதன் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.எனினும் இவ் முடிவு சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் கருத்துக்களே தவிர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்தல்ல என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
இதே வேளை இலங்கையில் இருந்து சென்றுள்ள அமைச்சர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியூதீன், நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உட்பட்ட உள்ளிட்ட 52 பேர் கொண்ட பெரியதொரு குழுவை இலங்கை ஜெனிவாவுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையிலேயே அங்கு, உள்முரண்பாடுகள் வெடித்துள்ளன.
இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராக பங்கேற்கும் அமைச்சர் மகிந்த சமரசிங்க, தன்னை ஓரம் கட்டியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இலங்கை ஜனாதிபதி செயலக மூத்த அதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.
அத்துடன் மகிந்த சமரசிங்கவினால் மேற்கொள்ளப்படும் வேலைகள் தொடர்பாக தனக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.முன்னதாக இலங்கை வெளிவிவகார அமைச்சரே ஜெனிவா கூட்டத்தில் உரையாற்றுவதாக இருந்தது.
பின்னர் மகிந்த சமரசிங்கவிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது ஜி.எல்.பீரிசுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மக்களை அணிதிரள அழைப்பு விடுத்துள்ளனர். இலங்கை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை, சர்வதேசத்திடம் வலியுறுத்தும் வகையில், ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற நாளில், நீதிக்காய் ஒன்றுபடுவோம் எனும் மாபெரும் மக்கள் போராட்டத்துக்கு, புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவாவில் ஒன்றுகூட தயாராகி வருகின்றனர்.
.அத்துடன் தலைநகர் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும், இன்று சர்வதேசத்துக்கு எதிராக மக்களை அணிதிரளுமாறு, இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.