Published On: Sunday, February 26, 2012
அழகான அம்மாக்கள் இணைந்தனர்

அம்மாவான லாரா தத்தாவும், அம்மாவாகப் போகும் ஷில்பா ஷெட்டியும் அன்பைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இவர்களுக்கு இடையே ஓர் அழகான நட்பு மலர்ந்திருக்கிறது.
நடிகையும், டென்னிஸ் ஸ்டார் மகேஷ் பூபதியின் மனைவியுமான லாரா தத்தா, ஒரு மாதத்துக்கு முன்பு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இன்று வரை வாழ்த்துச் செய்திகளுக்குப் பதில் அனுப்பிக் கொண்டிருக்கிறார், லாரா. அதேநேரம் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தையும் ரொம்பவே ரசிக்கிறார்.
குழந்தையைப் பெற்றெடுக்கும் முன்பும் `பிசி'யாக இருந்தார் லாரா. பிரசவத்திற்கு முன்னதாகக் கூட, இந்தியா வந்த அமெரிக்க அரட்டை அரங்க நட்சத்திரம் ஓப்ரா வின்பி ரேயை வரவேற்க தொழிலதிபர் பரமேஸ்வர் கோத்ரெஜால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு வந்தார் லாரா. அங்கு ஷாருக்கான் போன்ற பிரபலங்களுடன் கலகலப்பாகப் பழகினார்.
ஆனால் அநëத நிகழ்ச்சியில் லாரா ஒரு புதிய தோழியைப் பிடித்துவிட்டார். அவர்- ஷில்பா ஷெட்டி.
ஷில்பாவுடன் வெகு நெருக்கமாகப் பேசிய லாரா, அவருக்கு சில அத்தியாவசியமான டிப்ஸ்களை அள்ளி வழங்கினார். அதாவது, அம்மாவாகப் போகும் நிலையில், அம்மாவான பின் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்ற ஆலோசனைகள்.
லாரா, ஷில்பா இருவருமே உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வதில் அக்கறையான வர்கள். உடம்பை எப்படி `பிட்'டாக வைத்துக்கொள்வது என்று தனித்தனியே டி.வி.டி.யும் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஆனால் நேரில் சந்தித்துக்கொண்டபோது இருவருக்கு இடையிலும் எந்தப் போட்டியும் நிலவிய மாதிரித் தெரியவில்லை.
``குறிப்பிட்ட பார்ட்டியில் கலந்துகொண்டபோது, லாரா நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த போதும், ரொம்பவே சுறுசுறுப்பாகக் காணப்பட்டார். ஒவ்வொருவரையும் தேடித் தேடிச் சென்று பேசினார். அதிலும் லாராவுக்கும், ஷில்பாவுக்கும் இடையே ஒரு தனிப்பட்ட அன்பு தெரிந்தது. அவர்களின் பேச்சில் பெரும்பாலும் ஆரோக்கியம், திருமணம் குறித்த விஷயங் கள்தான் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, கர்ப்பத்தின் நிறைவுக் கட்டத்தில் உடம்பை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஷில்பாவுக்கு லாரா பிட்னஸ் டிப்ஸ் அளித்தார்'' என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய நட்பு ஒருபுறமிருக்க, தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் பொழுதை ரிலாக்ஸாக, மகிழ்ச்சியாகக் கழித்துவருகிறார் ஷில்பா. அவரது மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணமும் உண்டு.
சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டதுதான் அது. `தி டிசையர்- எ ஜர்னி ஆப் எ உமன்' படத்துக்காக அவ் விருதை ஷில்பாவுக்கு வழங்கியவர், கடந்த ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற இயக்கு நரான மார்க் பஷாட்.
ஷில்பாவுக்கு சந்தோஷக் காலகட்டம் இது!