Published On: Saturday, February 18, 2012
என் வாழ்க்கையில் யாரும் தலையிட வேண்டாம்
முதல் திருமணத்தை மறைத்து, அனன்யாவை 2-வது திருமணம் செய்ய இருந்ததாக தொழிலதிபர் மீது கொடுக்கப்பட்ட புகார் திடீர் வாபஸ் ஆனது. இந்நிலையில் அவரையே மணப்பேன் என அனன்யா கூறியுள்ளார். 'நாடோடிகள்', 'எங்கேயும் எப்போதும்' படங்களில் நடித்திருப்பவர் அனன்யா. இவருக்கும் திருச்சூர் தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர். அதை மறைத்து அனன்யாவை ஏமாற்றியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் அனன்யாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர். ஆனால் அனன்யா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. என்னை பிடிக்காதவர்கள் யாரோ இப்படி புகார் சொல்கிறார்கள். எங்கள் திருமணம் நடக்கும் என்று கூறி வருகிறார். இதை ஏற்காத பெற்றோர் அவரை வீட்டுச் சிறை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மகளை ஏமாற்றி ஆஞ்சநேயன் திருமணம் செய்ய முயன்றதாக பெரும்பாவூர் போலீசில் அனன்யாவின் தந்தை கோபாலகிருஷ்ணன் புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகாரை நேற்று திடீரென்று அவர் வாபஸ் பெறகிறார். ஆனால் இது பற்றி அவர் கூறும்போது, 'நான் போலீசில் எந்த புகாரும் அளிக்கவில்லை. அதெல்லாம் வெறும் வதந்திதான்' என்று கூறினார்.
இதுகுறித்து அனன்யா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: நான் நடிகை என்ற வகையில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறேன் என்பது உண்மைதான். அதற்காக என்னை பொதுச் சொத்து என்று எண்ணிவிடக்கூடாது. என் சொந்த வாழ்க்கையைப்பற்றி பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. எனக்கும், ஆஞ்சநேயனுக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன்தான் திருமணம் நடக்க உள்ளது. நானும், எங்கள் குடும்பத்தினரும் சந்தோஷமாக இருக்கிறோம். இதைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதில் எனக்கு அக்கறை இல்லை. நான் வீட்டு சிறையில் இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி இருந்தால் கொச்சியில் டைரக்டர் வேணுகோபன் இயக்கும் 'தி ரிப்போர்ட்டர்' பட ஷூட்டிங்கில் எப்படி நடித்துக் கொண்டிருக்க முடியும்.
ரீல் காதல்லதான் ட்விஸ்ட் இருக்கும்... ரியல் காதல்ல கூடவா..?