Published On: Saturday, February 18, 2012
'தாண்டவத்தில்' விக்ரமுடன் அனுஷ்கா

பெரும்பாலான தமிழ் படங்கள் பாடல் காட்சிகள் அனைத்தும் வெளி மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் படமாக்கபடுகிறது. இதேபோல் தாண்டவம் படத்தின் படப்பிடிப்பு டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
டெல்லியில் ஒரு சில பாடல் காட்சிகள் மற்றும் பிளாஷ்பேக் சீன்களும் எடுக்கப்பட்டுள்ளது. 'ஒரு பாதி கனவு நீயடி' பாடல் விக்ரம் மற்றும் அனுஷ்காவை வைத்து எடுக்கப்பட்டது. டெல்லியில் படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த குழு படத்தின் சில முக்கியமான காட்சிகளை படமாக்க அமெரிக்கா செல்லவுள்ளது. இந்தப்படத்தை இயக்குனர் விஜய் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் மதராசப்பட்டினம் புகழ் எமி ஜாக்ஸன் நடிக்கிறார்.
டைரக்டர் விஜய், விக்ரம், அனுஷ்கா இந்த மூவர் கூட்டணி, ஏற்கனவே யுடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தெய்வதிருமகள் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்பட்த்தையும் யுடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.