Published On: Saturday, February 25, 2012
2012இல் மீண்டும் குடிசன வீட்டுவசதிகள் தொகைமதிப்பு பணிகள்
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
குடிசன வீட்டுவசதிகள் தொகைமதிப்பு - 2011 இலங்கை முழுவதும் நடந்த அரசங்கம் திட்டமிட்டு இருந்தது. அது 2011ஆம் ஆண்டு நடைபெறாததால் 2012ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பமாகி மார்ச் 19ஆம் திகதி முடிவடையவுள்ளது. குடிசன வீட்டுவசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுப்பாளருக்கான பயிற்சி நெறியினை அரசாங்கம் வழங்கியதோடு நேற்று வெள்ளிக்கிழமை ஒட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிதேச செயலகத்தில் நடைபெற்ற உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஒட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிதேச செயலாளர் பிரிவிற்கு தொகைமதிப்பு கணக்கெடுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட 84 இளைஞர், யூவதிகளுக்கு உபகரணங்களை பிரதேச செயளாரும் பிரதி தொகைமதிப்பு ஆணையாளருமான எம்.சீ. அன்ஸாரில் வழங்கி வைக்கப்பட்டது. மட்டு. மாவட்ட புள்ளி விபரத் திணைக்கள உத்தியோகத்தர் வீ.ரொஸாத்த குமாரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
