எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Thursday, May 01, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, February 26, 2012

வாடிக்கையாளர்களுக்கு மொபிடெலின் வீடுகள்

Print Friendly and PDF


உபஹார பொதியின் மூன்றாண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் வகையில்
‘உபகாரத்திற்கு உபகாரம்’ சீட்டிழுப்பு நடத்தப்பட்டது.

அரசாங்க ஊழியர்களுக்கு ஈடிணையற்ற அனுகூலங்களை வழங்கியதன் மூலம் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய ‘உபஹார’ கட்டணப் பொதியின் 3 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் வகையில், தேசிய கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குனரான ஸ்ரீலங்கா ரெலிக்கொம் மொபிடெல் பரிசுச் சீட்டிழுப்பு ஒன்றினை நடத்தியுள்ளது. ‘உபகாரத்திற்கு உபகாரம்’ (உபகாரயட உபகாரயக்) என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட இந்த சீட்டிழுப்பின் மூலம் 3 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபா. 4 மில்லியன் பெறுமதியான தலா ஒவ்வொரு வீடுகள் பரிசாக வழங்கப்பட்டன. மொபிடெலின் முதன்மை காட்சியறையில் ஜனவரி 30ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வின் போது சீட்டிழுப்பின் வெற்றியாளர்கள் தமக்குரிய பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர்.

வெற்றியாளர்களுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவானும் மொபிடெலின் வர்த்தக குறியீட்டு தூதுவருமான முத்தையா முரளிதரன் வருகை தந்திருந்ததுடன், மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. லலித் டீ சில்வா மற்றும் மொபிடெல் நிறுவனத்தின் உயரதிகாரிகள் மத்தியில் வைத்து பரிசுகள் சம்பிரதாயப+ர்வமாக வழங்கி வைக்கப்பட்டன. அளவ்வ பிரதேசத்தை சேர்ந்த ய+.எச்.எம். ஜயக்கொடி, மருதானையைச் சேர்ந்தவரான எம்.எப்.எம். ஷெரீப் மற்றும் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த கே.எல்.எஸ்.என். ஆரியவன்ச ஆகியோரே இப்பெறுமதி மிக்க பரிசுளை வென்றெடுத்த அதிர்ஷ்டசாலி ‘உபஹார’ வாடிக்கையாளர்களாவர். அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான சீட்டிழுப்பானது, மேல் மாகாண இறைவரித் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் 2012 ஜனவரி 12ஆம் திகதி இடம்பெற்றது.

பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியின் பொருட்டு நாடு தயார் நிலையில் இருந்த வேளையில் கையடக்கத் தொலைபேசி தொலைத்தொடர்பாடல் துறையில் முதன்முதலாக பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்துவதன் ஊடாக, தகவல் தொடர்புமிக்கதும் அறிவு வளம் பொருந்தியதுமான சமூகம் ஒன்றினை நோக்கி இலங்கையை முன்கொண்டு செல்லும் நடவடிக்கையில் மொபிடெல் நிறுவனம் நிதானமாக உறுதியுடன் முன்னேறிச் செல்கின்றது. நாட்டுக்கு சேவையாற்றியவர்களுக்கு வெகுமதியளித்தல் மற்றும் மதிப்பளித்தல் ஆகியவற்றுக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் முன்னெடுப்புக்களை அங்கீகரிப்பதிலும் அதற்கு ஆதரவு வழங்குவதிலும், உண்மையாகவே இலங்கையருக்குச் சொந்தமான வர்த்தக குறியீடாக திகழும் தேசிய கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குனரான மொபிடெல் பெருமிதம் அடைகின்றது. அரச துறை ஊழியர்களினால் வெளிப்படுத்தப்பட்ட அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையிலமைந்த அவ்வாறான ஒரு முன்னெடுப்பாகவே ‘உபஹார’ வெகுமதி திட்டம் காணப்படுகின்றது.

நாட்டின் அபிவிருத்திக்காக அரச துறை ஊழியர்களினால் வழங்கப்பட்ட பெறுமதிமிக்க பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில், 2008ஆம் ஆண்டு ‘உபஹார’ கட்டணப் பொதியினை மொபிடெல் அறிமுகப்படுத்தியது. மொபிடெல் வசமுள்ள அதிநவீன கையடக்கத் தொலைபேசி தொலைத்தொடர்பு வலையமைப்புடன் இணைந்ததான பரந்துபட்ட சேவைப் பரம்பல் (கவரேஜ்) ஆனது, நாடெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்கள் உபகார கட்டணப் பொதியுடன் இணைந்திருப்பதற்கும் அதனது அனுகூலங்களை அனுப­விப்பதற்கும் வசதியாக அமைந்துள்ளது.

ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்திற்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமாகவும் அதேநேரம் தேசிய கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குனர் என்ற நாமத்தையும் பெற்றதாகவும் திகழும் மொபிடெல் ஆனது, தனது வாடிக்கையாளர்களின் திருப்தியினை தொடர்ச்சியாக உறுதிப்படுத்துவதன் மூலமாக அவர்களுக்கு மிகச் சிறந்த உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. நாட்டினது கையடக்கத் தொலைபேசித் துறையின் அபிவிருத்தி விடயத்தில், தனது தொடர்ச்சியான புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவை ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து மொபிடெல் செயற்பட்டு வருகின்றது.

ஸ்ரீலங்கா ரெலிக்கொம் மொபிடெல் பற்றி:
தேசிய கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குனரும் இலங்கை கிரிக்கெட் அணியின் உத்தியோகபர்வ அனுசரணையாளருமான ஸ்ரீலங்கா ரெலிக்கொம் மொபிடெல், ஸ்ரீலங்கா ரெலிக்கொமிற்கு முற்றிலும் சொந்தமான ஒரு துணை நிறுவனமாகும். இந்நிறுவனம் EDGE / GPRS செயற்படு திறனைக் கொண்டதும் இரட்டைப் பட்டை (Dual band) இனை செயற்படுத்த வடிவமைக்கப்பட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டதுமான 2.5 GSM வலையமைப்பினை 2004ஆம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. 2007 டிசம்பரில், தென்னாசியாவிலேயே முதலாவது Super 3.5G வலையமைப்பான 3.5G HSPA வலையமைப்பினை கம்பனி அங்குரார்ப்பணம் செய்தது. மேலும், HSPA + MIMO தொழில் நுட்பத்தை 28.8 Mbps கீழிணைப்பு (Down link) வேகத்துடன் செயற்படுத்தி காண்பித்துள்ளது. அத்துடன் தென்னாசியப் பிராந்தியத்திலேயே முதன்முறையாக 96 Mbps இற்கும் அதிகமான கீழிணைப்பு (Down link) வேகத்துடன 4G / LTE தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளது. 2.5G / 3.5 G/ 4G வலையமைப்புக்கள் மற்றும் சேவைகளுக்காக இன்று வரை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான முதலீட்டினை மொபிடெல் மேற்கொண்டுள்ளது. இலங்கையிலுள்ள எந்தவொரு வலையமைப்பில் இருந்தும் 1717 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் ஊடாக மொபிடெலின் வாடிக்கையாளர் சேவையை பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு www.mobitel.lk என்ற இணையத்தளத்தினை பார்வையிடுங்கள்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452