Published On: Sunday, February 12, 2012
யார் உண்மையான பிச்சைக்காரர்கள்; இலங்கையில் புதிய கணக்கெடுப்பு

நாட்டிலுள்ள பிச்சைக்காரர்கள் தொடர்பில் கணக்கெடுப்பொன்றை நடாத்துவதற்கு சமூக அபிவிருத்தி தொடர்பிலான தேசிய நிறுவனத்தின் ஊடாக சமூக சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. நகரப் பகுதிகளிலேயே அதிகளவான பிச்சைச்காரர்கள் வாழ்வதாகவும் அவர்களில் எத்தனை பேர் உண்மையான பிச்சைக்காரர்கள் என்பதை அடையாளம் காண்பதற்கே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.எஸ்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கணக்கெடுப்பின் பின்னர் அவர்களை சமூகமயப்படுத்தும் விரிவான திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சு தெரிவிக்கிறது. மேலும் பிச்சைக்காரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு வாழ்வாதார தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவும் வீடற்றவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கவும் சமூக சேவைகள் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.