Published On: Wednesday, February 22, 2012
இந்தியாவில் காங்கிரசாரின் உண்ணும் போராட்டம்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கு போட்டியாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி சார்பில் 3 நாள் உண்ணும் போராட்டம் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது.
இதற்கு அமைப்பின் தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் லிங்கம், தமிழ் தேசம் கட்சி தலைவர் தங்கமணி, பொன்னையா உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து சத்தியசீலன் கூறுகையில் 'இன்று போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வாழைப்பழம், பிஸ்கட் வழங்கப்பட்டது. நாளை சாப்பாடும், நாளைமறுநாள் பிரியாணியும் வழங்கப்படும்' என்றார்.