Published On: Tuesday, February 14, 2012
சவூதி அரேபிய தூதுவர் மட்டக்களப்பு பாடசாலையைப் பார்வை
(எம்.ரி.எம்.பாரிஸ்)
மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிமனைக்குட்பட்ட மட்/மீராவோடை உதுமான் வித்தியாலய கட்டிடம் சவூதி அரசாங்கத்தினால் நிர்மாணிப்பதற்காக சவூதி அரேபிய தூதுவர் ஸாலிஹ் அல்-பர்ராக் அதனை நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வில் சிறுவர் மகளிர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லாஹ், பாடசாலை அதிபர் சேகு லெவ்வை, கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் பொதுத் தலைவரும், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு கலாசார உத்தியோகத்தர் மௌலவி ஏ.எல். பீர்முஹம்மட் (காஸிமி), கல்குடா அல்-கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம். ஹாறூன் (ஸஹ்வி) கோறளை மத்தி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் உத்தியோகத்தர் றுவைத், கோறளை மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர் எம். புஹாரி, மீராவோடை ஜும்ஆப் பள்ளி தலைவர் மஹ்மூத் ஹாஜி, மர்கஸ் அரபுக்கலாபீடத்தின் அதிபர் ஏ. ஹபீப் (காஸிமி), கலாபீடத்தின் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.எச்.எம். அறபாத் (ஸஹ்வி), தாருஸ்ஸலாம் அரபுக் கலாபீடத்தின் அதிபர் இஸ்மாயில் (மதனி) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.