Published On: Tuesday, February 14, 2012
முந்தல் பிரதேசத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
(புத்தளம் செய்தியாளர்)
முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மீனவர்கள் எரிபொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை மதுரங்குளி நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தளம் கொழும்பு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக புத்தளம் கொழும்பு பிரதான வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. எரிபொருளுக்கு மானியம் வேண்டாம். பழைய விலைக்கே மண்ணெண்ணெய்யை வழங்கவேண்டும் போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியதோடு சுலோகங்களையும் ஏந்தி நின்றனர்.





