Published On: Tuesday, February 07, 2012
அமெரிக்க அரசியல் பிரமுகர்கள் இருவர் அடுத்தவாரம் இலங்கை வருகை
(முஹம்மட் பிறவ்ஸ்)
அமெரிக்காவின் சிவிலியன் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் செயலர் மரியா ஒட்ரியோ மற்றும் தெற்கு, மத்திய ஆசிய விவகார செயலர் ரொபர்ட் ஓ பிளேக் ஆகியோர் அடுத்தவாரம் இலங்கைக்கு பயணிக்கவுள்ளதாக அமெரிக்கா மாநிலத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
இம்மாதம் 12-14 அளவில் இவர்கள் இருவரும் கொழும்புக்கு பயணிப்பார்கள் என அமெரிக்காவின் மாநிலத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மரியா ஒட்ரியோ, ரொபர்ட் ஓ பிளேக் இருவரும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட அரசாங்க அதிகாரிகள் பலரை சந்திக்கவுள்ளனர். அத்துடன் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வழங்கும் விருந்திலும் கலந்து கொள்வர்.