Published On: Tuesday, February 07, 2012
இளைஞர் பாராளுமன்றத்தினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு
(நப்றிஸ்)
சாய்ந்தமருது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.அன்வரின் முயற்சியால் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திற்கும், சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்திற்கும், பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி எம்.வை.எம். லத்தீப் தலைமையில் விளையாட்டுக் கழகங்களுக்கும் ஒருதொகுதி விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.
சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சாய்ந்தமருது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அன்வர், பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். நபார், விளையாட்டு ஆசிரியர் ரீ.கே.எம். சிறாஜ் உட்பட பல ஆசிரியைகளும் கலந்துகொண்டனர்.