Published On: Friday, February 17, 2012
கமலோடு இணையும் ரஜினி

'விஸ்வரூபம்' படத்தினை அடுத்து கமல் இயக்க இருக்கும் படம் 'மருதநாயகம்'. மருதநாயகம் படம் 1997-ல் துவங்கப்பட்டது. ஆனால், அதற்கான தயாரிப்பு செலவுக்கு பணப் பற்றாக்குறையால் படம் அப்போதைக்கு நிறுத்திவைக்கப்பட்டது. இப்போது கமல் அப்படத்திற்கான பணிகளில் ஈடுபட தயாராக உள்ளார். படத்தின் இப்போதைய பட்ஜெட் 150 கோடியைத் தாண்டுமாம்.
'மருதநாயகம்' படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார். 'மருதநாயகம்' படத்தில் ரஜினிகாந்திற்கு ஏற்ற பாத்திரம் ஒன்று இருக்கிறதாம். "பல வருடங்களுக்கு முன் நானும், ரஜினியும் இணைந்து நடித்தோம். அதன் பிறகு நாங்கள் இருவரும் இணைந்து நடிப்பதற்கேற்ற கதையோடு யாரும் எங்களை அணுகவில்லை. இப்போது நானே அதைச் செய்துவிட்டேன்." என கமல் தெரிவித்துள்ளார். ரஜினியும், கமலும் இணையும் படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அப்டிபோடு... பட்ஜெட் கவலை இனி அடியோடு போச்சு....