Published On: Wednesday, February 15, 2012
சிலாபம் ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு; சகல வர்த்தக நிலையங்கள் மூடு

(புத்தளம் செய்தியாளர்)
சிலாபம் நகரில் இன்று நடைபெற்ற எரிபொருட்களின் விலையேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது இடம்பெற்ற அசாதாரண நிலையைத் தொடர்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் படுகாயங்களுக்குள்ளாகி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்புத் தரப்பினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ள நிலையிலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடரந்து சிலாபம் நகரில் பதற்றநிலை ஏற்பட்டது. வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டன.