Published On: Saturday, February 18, 2012
மரணித்த மீனவரின் இறுதி ஊர்வலம் இன்று; சிலாபத்தில் இயல்புநிலை பாதிப்பு

(புத்தளம் செய்தியாளர்)
சிலாபம் ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்த அண்டனி பெர்னாண்டோவின் இறுதி ஊர்வலம் இன்று சனிக்கிழமை 4 மணிக்கு வெல்ல பிரதேசத்தில் நடைபெறவுள்ளது. ஊர்வலத்தின் பின்னர், ஈமக்கிரியைகள் வெல்ல பிரதேசத்திலுள்ள மயானத்தில் நடைபெறும்.
இறுதிப் கிரியைகள் நடைபெறுவதை முன்னிட்டு சிலாபம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட மீனவரின் மரணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், துக்கத்தை வெளிக்காட்டும் நோக்குடனும் நகரில் கறுப்பு கொடிகளும், வெள்ளைக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.
இன்று சிலாபம் நகரில் சகல கடைகளும் மூடப்பட்டு இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து வழமை போன்று நடைபெறுகின்றது. அண்டனி பெர்னாண்டோவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக நீர்கொழும்பு, வென்னப்புவ பகுதிகளிலிருந்தும் மீனவர்கள் பலர் இங்கு வருகை தந்துள்ளனர்.


