Published On: Tuesday, March 06, 2012
பேஸ்புக் மூலம் இரு நியுஸிலாந்து யுவதிகளுக்கு அல்வாக கொடுத்தவர் கைது

பேஸ்புக் மூலம் நியுஸிலாந்தில் 2 யுவதிகளுடன் தொடர்புகொண்டு அவர்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற இலங்கையர் ஒருவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த இலங்கையர் 19 வயதுடைய ரஜீவ சுரேன் பினிதையா என்று நியுஸிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக்கில் 14 வயதுடைய இரு யுவதிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திய அவர், அவர்களை அவரது வீட்டுக்கு வரவழைத்து, மதுபானத்தை பருக செய்தததன் பின்னர், அவர்களை துஸ்பிரயோகிக்க முயற்சித்துள்ளார். எனினும், அந்த யுவதிகளில் ஒருவர் தொலைபேசியின் ஊடாக தமது தாயாரை தொடர்பு கொண்டு சம்பவத்தை கூறியதன் பின்னர், குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.