Published On: Tuesday, March 06, 2012
'ரசிகர் மன்றம்' ஆரம்பிக்கும் ஹன்சிகா மோட்வானி

‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோட்வானி. ஜெயம் ரவியுடன் ‘எங்கேயும் காதல்’, விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படங்களில் நடித்துள்ளார்.
ஹன்சிகாவுக்கு சிங்கப்பூரில் உள்ள தமிழ் அமைப்பு ஆன் லைனில் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி ‘கனவுகன்னி’ விருது வழங்கியது. இந்த விருதை ஹன்சிகா நேரில் சென்று வாங்கிவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.
ஹன்சிகா அளித்த பேட்டி வருமாறு:-
வெளிநாட்டு அமைப்பு எனக்கு ‘கனவுகன்னி’ விருது வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனது முதல் சர்வதேச விருது ஆகும். தமிழ் படங்களில் நடித்ததற்காக இவ்விருது கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் இருப்பதால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டேன்.
எனக்கு ரசிகர்மன்றம் தொடங்க நிறைய ரசிகர்கள் ஆர்வப்படுகின்றனர். என்னிடம் அதற்காக அனுமதி கேட்டு வருகின்றனர். எனது நல விரும்பிகளிடம் இதுகுறித்து ஆலோசிக்க உள்ளேன். ரசிகர்மன்றம் துவங்குவது குறித்து விரைவில் முடிவு அறிவிப்பேன்.