Published On: Saturday, March 03, 2012
நாளை சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஆண்டு விழா

(கலாநெஞ்சன்)
சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஆண்டு விழா நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலையத்தின் தலைவர் வ. வடுகராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சர்வ ரூபானந்தா பிரதம விருந்தினராகவும் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ.ஜெயராமன், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கணேசலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.