Published On: Saturday, March 03, 2012
வரிபத்தான்சேனை ஜும்ஆ பள்ளிவாசல் வீதி அபிவிருத்தி அங்குராப்பணம்
வரிபத்தான்சேனை ஜும்ஆ பள்ளிவாசல் வீதி ஜெயிக்கா திட்டத்தின்கீழ் 7 மில்லயன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்படவுள்ளது. வரிபத்தான்சேனையில் நடைபெற்ற ஆரம்வ வைபவ நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.அமீரின் அழைபின் பேரில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன வீடமைப்பு மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர், நீர்ப்பாசன மாகாண பிரதிப் பணிப்பாளர் யு.எல்.ஏ. நஸார், பிரதேச செயலாளர் யு.எல்.நியாஸ், இறக்காமம் பிரதேசசபை தவிசாளர், வரிபத்தான்சேனை தேசிய காங்கிரஸ் அமைப்பாளர் சமுன், முன்னாள் சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர் என்.எம்.ஆசிக், பள்ளிவாயல் நிர்வாகத்தினர் மற்றும் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.



