Published On: Friday, March 09, 2012
இலங்கை பிரதிநிதிகள் வருகை குறித்த தமிழக முதல்வரின் கருத்து பரிசீலிக்கப்படும்

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர உள்ள தீர்மானத்தில், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா கூறினார். பெங்களூரில் இருந்து சொந்தப் பயணமாக சிங்கப்பூர் செல்லும் வழியில் அமைச்சர் கிருஷ்ணா சென்னை வந்தபின், விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், போர் நெறிமுறைகளை மீறி செயல்பட்டதாக இலங்கை மீது அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில், இந்தியாவின் நிலை என்ன என்பதை மத்திய அரசு முடிவு செய்துவிட்டதா?
இதுவரை எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவும், இலங்கையும் நீண்ட காலமாக நட்புறவுடன் உள்ள நாடுகள். இலங்கை அண்டை நாடு மட்டுமல்ல; சகோதர நாடாகவும் உள்ளது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் மீது முடிவெடுப்பது என்பது, ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்சினை.
எனவே, இந்த விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. என்ன முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்து, மத்திய அரசு மிகவும் ஆழமாக சிந்தித்து வருகிறது. விரைவில் அதுகுறித்து அறிவிக்கப்படும்.

