Published On: Friday, March 09, 2012
இரு படைவீரர்களை சுட்டுக்கொன்ற படைவீரர் தன்னைத்தானே சுட்டுக் கொலை

சாவகச்சேரியில் படைவீரர்கள் மூவர் நேற்று வியாழக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். சாவகச்சேரி ஸ்ரீமுருகன் ஆலயத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த படைவீரர்களே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஒரு படைவீரர்கள் ஏனைய இரு படைவீரர்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொன்றுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புகராச்சி மேலும் தெரிவித்தார். இவர்களின் தனிப்பட்ட பகையே இச்சம்பவத்திற்கு காரணமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

