Published On: Wednesday, March 07, 2012
சாளம்பைக்கேணியில் 4 கால் கோழிக்குஞ்சு
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சாளம்பைக்கேணி 05ஆம் பிரிவிலுள்ள 5/30 இலக்க வீட்டு உரிமையாளரான ஏ.எச்.எம்.பர்ஷா என்பவரின் வீட்டில் அடைகாத்த கோழி 4 கால்கள் கொண்ட அதிசய கோழிக்குஞ்சு ஒன்றை பொரித்தெடுத்துள்ளது. இக்கோழிக் குஞ்சைப் பார்ப்பதற்கு தினமும் அவரது வீட்டிற்கு பெருமளவிலான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.



