Published On: Saturday, March 10, 2012
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை தெற்காசிய நாடுகளுக்கு முன்னுதாரணம்

(எஸ்.ஆர்.எம்.எம். இர்ஷாத்)
பங்களாதேஸுக்கும் இலங்கைக்குமான வர்த்தக உறவு பலம் பெறுமதியானதாக காணப்படுவதாகவும் இலங்கை ஜனாதிபதியின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கிய நாட்டின் முன்னேற்றம் தெற்காசிய வலய நாடுகளுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளதாக கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் இடம்பெற்ற இலங்கை – பங்களாதேஷ் கூட்டு பொருளாதார ஆணைக்குழுவின் 4ஆவது செயலமர்வு நிறைவுற்றதன் பின்னர் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றும் அங்கு இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் பங்ககளாதேஸுக்கு விஜயம் செய்தபோது, பங்களாதேஷ் பிரதமரை சந்தித்து ஆணைக்குழுவின் செயற்பாடு ஆரம்பிக்கப்படுவதற்கான பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
செயலமர்வில் இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய ஒவ்வொரு இருவருடங்களுக்கு ஒருமுறை கூட்டு பொருளாதார ஆணைக்குழுவின் மாநாடு நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார். அடுத்த மாநாடு 2014ஆம் ஆண்டில் கொழும்பில் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அதே இலங்கையில் தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வசதிகள் காணப்படுவதாகவும் பங்களாதேஷின் முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்ய முன்வரவேன்டும் என்ற வேண்டுகோளை அமைச்சர் றிசாத் பதியுதீன் பங்களாதேஷ் விவகார அமைச்சர் டாக்டர் டிப்பு மோனியிடம் முன்வைத்த போது அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் இருதரப்பு வர்த்தக உறவுக்கு அமைச்சர் றிசாத்தின் வருகை பாலமாக அமைவதாகவும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்னார்.
இம்மாதம் 28ஆம் முதல் 31ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள பிரமாண்டமான எக்ஸ்போ கைத்தொழில் கண்காட்சியில் கலந்துகொள்ள பங்களாதேஷ் வர்த்தக சமூகத்தினருக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது அழைப்பினையும் விடுத்துள்ளார்.




