Published On: Tuesday, March 06, 2012
அல்போன்சாவின் 2வது தற்கொலை முயற்சி

கவர்ச்சி நடிகை அல்போன்சா காதலர் தூக்கில் தொங்கி பிணமானதால் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். இது அவரது 2-வது தற்கொலை முயற்சி ஆகும். சில வருடங்களுக்கு முன் தன்னுடன் இணைந்து நடித்த சாகர் என்பவரை காதலித்தார். அவரையே திருமணம் செய்து கொள்ளவும் முடிவு எடுத்தார்.
ஆனால் சாகர் திடீரென வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அது அல்போன்சாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனம் உடைந்த அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையை தின்று சாக துணிந்தார். அவரை பெற்றோர் ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினார்கள். அதே ஆஸ்பத்திரியில் தான் இப்போது மீண்டும் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
வினோத்குமாரும், அல்போன்சாவும் ஒரு வருடத்துக்கு மேலாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தனர். ஆனால் இப்போது அவர்கள் காதலும் முறிந்து போய் உயிர்ப்பலி ஏற்பட்டு உள்ளது. அல்போன்சாவின் தொடர் தற்கொலை முயற்சியாலும் அவரது வாழ்க்கையில் நடந்து வரும் துயர சம்பவங்களாலும் குடும்பத்தினர் மனம் உடைந்து உள்ளனர்.
அல்போன்சா சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரியில் அவர்கள் உள்ளனர். அல்போன்சாவின் தாய் ஓமனா, தந்தை அந்தோணி. பிரதீப், மனோஜ் என்ற இரு அண்ணன்களும், ராபர்ட் என்ற தம்பியும் இருக்கிறார்கள். ராபர்ட் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக உள்ளார்.