எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, March 06, 2012

ஆட்டம் கண்டது அவுஸ்திரேலியா; இலங்கை அசத்தல் வெற்றி

Print Friendly and PDF


சி.பீ.கிண்ண முத்தரப்பு தொடரின் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிச்சுற்றின் இரண்டாவது போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா அணிகள் விளையாடும் சி.பீ. கிண்ண முத்தரப்பு கிரிக்கட் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
தொடரின் இறுதி போட்டிக்கு அவுஸ்திரேலியா-இலங்கை அணிகள் தகுதி பெற்றன. இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.
அவுஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கிடையேயான இறுதிச்சுற்றின் 3 போட்டியில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலியா 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது.

இந்நிலையில் இறுதிச்சுற்றின் இரண்டாவது போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தது.

அவுஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மேத்யூ வடே 14 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 100 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் சதத்தை கடந்து 117 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் அவுஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 271 ஓட்டங்கள் எடுத்தது.

இதனையடுத்து 272 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கயது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன 80 ஓட்டங்களும், டில்சன் சதத்தை கடந்து 106 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய சங்கக்கரா 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் இலங்கை அணி 44.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து தற்போது அவுஸ்திரேலியா, இலங்கை ஆகிய இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452