Published On: Sunday, March 11, 2012
வீராவும் - வீரய்யாவும்

ரவிதேஜா, காஜல் அகர்வால், ஷாம், டாப்ஸி மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'வீரா'. இப்படத்தின் தமிழ் டப்பிங்கான 'வீரய்யா' விரைவில் வெளிவர இருக்கிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாக்யராஜ் இப்படத்தின் இசையை வெளியிட்டார்.
இப்படத்தின் கதை சுருக்கம் :
கடமை தவறாத போலீஸ் அதிகாரியான ஷாம், மகளிர் விடுதியில் ஒரு பெண்ணை கற்பழித்த ரெளடியை என்கவுண்டரில் போட்டு தள்ளுகிறார். அந்த ரெளடி மிகப்பெரிய தாதாவின் தம்பி. தாதா ஷாமை பழிவாங்க துடிக்கிறான்.
அதன் விளைவாக ஷாமின் மகனை கொன்று எரித்து விடுகிறான். 'உன் மகளையும் கொல்லாமல் விட மாட்டேன்' என்று மிரட்டுகிறான். அதன் பின் பலசோதனைகளை சந்திக்கும் ஷாமின் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக, பல கலைகளில் தேர்ச்சியடைந்த ரவி தேஜா அனுப்பப்படுகிறார்.
ரவிதேஜாவை ஷாம் மனைவி (ஸ்ரீதேவி விஜயகுமார்) பல வகைகளில் அவமானப்படுத்துகிறாள். இந்நிலையில் ரவி தேஜா உண்மையான செக்யூரிட்டி இல்லை என்று தெரியவர, அதன் பின் வில்லன்களை அவர் அழிப்பது தான் கதை. ரவி தேஜா யார்? அவன் ஏன் ஷாமுக்கு செக்யூரிட்டியாக வந்தார் என்பதை சொல்கிறது ' வீரா '
இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில், பெங்களூரு, அம்பாசமுத்திரம், ராஜமுந்திரி மற்றும் ஆந்திராவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.