Published On: Sunday, March 11, 2012
ரோம் நகரில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
'இலங்கைக்கு எதிரான சர்வதேச சவால்களுக்கு எதிராக எழுந்து நிற்போம்’ என்ற கோஷத்துடன் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நேற்று முன்தினம் ரோம் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இத்தாலியின் மிலானோ நகரிலும், பிரான்ஸின் நாபொலி, கடானிய, வெரோனா நகரங்களிலும் பாரிஸ் நகரிலும் லண்டன் நகரிலும் இப்படியான ஆர்ப்பாட்டங்களை நடாத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இது தெடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில், ஆயிரக்கணக்கான சகோதர உறவூகளின் உயிர்களை பறித்ததுடன் ஆயிரக் கணக்கானவர்களை உடல் மற்றும் உளவியல் ரீதியில் முடமாக்கி பில்லியன் கணக்கான நிலையான மற்றும் நிலையற்ற சொத்துக்களை துவம்சம் செய்து இலங்கை தேசத்தை நிர்க்கதியற்ற நிலைக்குள்ளாக்கிய மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கவின் ஈடிணையற்ற தலைமைத்துவத்தின் கிழ் நிர்மூலமாக்கி ஆண்டுகள் மூன்று நிறைவடைந்துள்ளது.
இடத்துக்கிடம் மனித வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும், பேரூந்துகளில் குண்டுகளை வெடிக்கவைத்தும் கிராமப்புற மக்களை உயிரோடே வெட்டி கொத்திய யூகத்திற்கு இன்று முடிவூ கட்டப்பட்டுள்ளது. இன்று எங்கள் தாய் நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் மற்றும் சகலரும் சமாதானத்துடனும் ஒற்றுமையாகவூம் வாழுகின்ற அழகிய சுதந்திரமான நாடாகும். இலங்கை இராணுவத்தினரை சர்வதேச மட்டத்தில் மிகக் கொடூரமானவர்களாக புலிப் பயங்கரவாதிகள் சித்தரிப்பதுடன் அதற்கு மேலாக தருஸ்மன் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையையூம் இலங்கையர்களான நாங்கள் எதிர்க்கின்றௌம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.