Published On: Friday, March 02, 2012
மட்டக்களப்பில் பராமரிப்பு வேலைகள் காரணமாகவே மின் விநியோகம் தடை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மின்பொறியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் இன்று 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மின்சார விநியோக தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, காவத்தமுனை, ஓட்டாமாவடி, மீராவோடை, செம்மனோடை, கறுவாக்கேணி, கிண்ணியடி, சின்னவேம்பு, பாசிக்குடா, கிரான், சந்திவெளி, முறக்கெட்டான்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, உன்னிச்சை, ஆயித்தியமலை, பங்குடாவெளி, இலுப்படிச்சேனை, மரப்பாலம், கரடியனாறு, இராஜபுரம், ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர,கித்துல், கோப்பாவெளி, பெரியபுல்லுமலை, தும்பாலஞ்சோலை, ஐயங்கேணி, மிச்சி நகர, தளவாய், மீராகேணி, சதாம் உசைன் கிராமம், ஹிஸ்புல்லா கிராமம், கொம்மாந்துறை, செங்கலடி, களுவங்கேணி, ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை, சவுக்கடி, மயிலம்பாவெளி, திருப்பெருந்துறை மற்றும் ஊறணி வரை இந்த மின்சார விநியோக தடை அமுல்படுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாகவே இந்த மின்சார விநியோக தடை அமுல்படுத்தப்பட்டிருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.