எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, March 02, 2012

வாழ்வா? சாவா? போராட்டத்தில் இலங்கை; அவுஸ்திரேலியாவுடன் இன்று மோதல்

Print Friendly and PDF


முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் கடைசி லீக் போட்டியில் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இலங்கை அணி பைனலுக்கு முன்னேற முடியும். அதே நேரத்தில் தோற்றால், இந்திய அணிக்கு பைனல் வாய்ப்பு கிடைக்கும்.

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா (19 புள்ளி) பைனலுக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்தியா, இலங்கை அணிகள் தலா 15 புள்ளிகளுடன் அடுத்த இரு இடங்களில் உள்ளன. 

இன்று மெல்போர்னில் நடக்கும் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. 

இலங்கை முன்னிலை:
இலங்கை அணியை பொறுத்தவரை வாழ்வா...சாவா போட்டி. அனைத்து விஷயங்களும் இலங்கை அணிக்கு சாதகமாகத்தான் உள்ளன. அணியின் பேட்ஸ்மேன்கள், நல்ல "பார்மில்' உள்ளனர். கடந்த போட்டியில் சதம் அடித்த தில்ஷன், சங்ககரா ஜோடி இன்றும் ஸ்கோரை அதிகரிக்க முயற்சிக்கலாம். தவிர, கேப்டன் ஜெயவர்தனா, திரிமான்னே மற்றும் சண்டிமால் ஆகியோரும் ரன் குவிப்பது நல்ல செய்தி. பின் வரிசையில் ஆல் ரவுண்டர்கள் மாத்யூஸ், பெரேராவும் வெற்றிக்கு கைகொடுக்கலாம்.

பவுலிங் பலம்:
இலங்கை அணியின் பவுலிங் இந்தியாவிடம் தான் எடுபடவில்லை. மற்றபடி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த மூன்று போட்டிகளிலும் மலிங்கா, குலசேகரா, பெரேரா கூட்டணி நன்றாகத்தான் செயல்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் தொல்லை தான். வேகப்பந்து வீச்சாளர் மகரூப் நீக்கப்பட்டு, சுழற்பந்து வீச்சாளர் சேனநாயகே, ஹெராத்துடன் இணைகிறார். 

பேட்டிங் மோசம்:
ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங், இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியை தவிர, மற்ற 2 ஆட்டங்களில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. துவக்க வீரர் வாட்சன், வார்னர் இருவரும் அதிரடியாக ரன்கள் சேர்த்தால் மட்டுமே, இடையில் ஏற்படும் சரிவை ஈடுகட்டலாம். 

ரெகுலர் கேப்டன் கிளார்க், காயம் குணமடையாத நிலையில் இன்று களமிறங்க போவதில்லை எனத் தெரிகிறது. "மிடில் ஆர்டரில்' டேவிட் ஹசி, மைக்கேல் ஹசி, இளம் பாரஸ்ட், பின் வரிசையில் வேட், கிறிஸ்டியன் சாதிப்பர் என நம்பலாம்.
பட்டின்சன் வருகை:
அணியின் பவுலிங்கை பொறுத்தவரையில், சுமார் ரகம் தான். இதனால், ஹாரிஸ் நீக்கப்பட்டு பட்டின்சன் இடம் பெறுவது, பிரட் லீ, மெக்கே போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். சுழலில் வேறு வழியின்றி தோகர்டி தொடர்வார்.

வரலாறு சாதகம்:
இலங்கை அணி கடந்த 1996ல் இதுபோன்ற கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில், இதே மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. கடைசியாக 2006ல் நடந்த முத்தரப்பு தொடர் பைனலுக்கு தகுதி பெற்ற இலங்கை அணி மீண்டும் சாதிக்குமா அல்லது இந்தியாவுக்கு வழி விடுமா என்பது இன்று தெரிந்துவிடும்.

இந்தியாவின் வாய்ப்பு எப்படி:
ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே பைனலுக்கு முன்னேறி விட்டதால், இன்று தோல்வியடைந்தாலும் தொல்லை இல்லை. ஆனால் இலங்கை வென்றால், 19 புள்ளியுடன் பைனலுக்கு செல்லும். இந்தியா (15 புள்ளி) வெளியேறும்.

* அதேநேரம், இலங்கை அணி தோற்கும் பட்சத்தில், இந்திய அணிக்கு எதிரான 4 போட்டியில் 2ல் தோற்றதால், அதிக வெற்றி அடிப்படையில் பைனல் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும்.

* மாறாக மழையால் போட்டி ரத்தானால், இரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும் பட்சத்தில், ஆஸ்திரேலியா-இலங்கை பைனலுக்கு செல்ல, இந்தியா நாடு திரும்ப வேண்டியது நேரிடும்.

மழை வருமா:
இன்று போட்டி நடக்கும் மெல்போர்னில் அதிகபட்ச வெப்பநிலை 24, குறைந்த பட்சம் 14 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் பெரும்பாலும் மேகமூட்டமாக காணப்படும். இரவில் மழை வர 50 சதவீதம் வாய்ப்புள்ளது.

யாருக்கு சாதகம்:
மெல்போர்னில் இதுவரை இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் 12 முறை மோதின. இதில் ஆஸ்திரேலியா 7, இலங்கை 5ல் வென்றன. 
* இலங்கை அணி ஒட்டு மொத்தமாக பங்கேற்ற 15 போட்டிகளில் 10ல் தோல்வியடைந்தது.
* பேட்டிங்கில் ஆஸ்திரேலிய அணி கடந்த 1999ல் இலங்கைக்கு எதிராக அதிகபட்சமாக 310/8 ரன்கள் எடுத்தது.
* இலங்கை அணி கடந்த 1999 போட்டியில், அதிகபட்சமாக 267 ரன்கள் எடுத்துள்ளது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452