எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, March 02, 2012

கோவிந்தா மகள் 'நர்மதா' சினிமாவில் நடிக்கிறார்

Print Friendly and PDF


பாலிவுட் நடிகர் கோவிந்தா சொந்த படத்தில் மகளை அறிமுகம் செய்கிறார்.

இந்திப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கோவிந்தா. இவருக்கு நர்மதா என்ற மகளும், யஷ்வர்தன் என்ற மகனும் உள்ளனர். 22 வயதாகும் தன்னுடைய மகளை சொந்த தயாரிப்பில் பாலிவுட் பட உலகில் அறிமுகம் செய்வதற்கு கோவிந்தா திட்டமிட்டுள்ளார்.

நர்மதா அறிமுகமாக உள்ள படம் நல்ல கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்று நடிகர் கோவிந்தா தெரிவித்துள்ளார். குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்குடன் நர்மதா இந்திப்பட உலகில் அறிமுகமாகிறார் என்று பாலிவுட்டில் கூறப்படுகிறது.

இதுகுறித்து நடிகர் கோவிந்தா கூறியதாவது:-

படம் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். நான் ஆரம்பத்தில் படம் தயாரித்தேன். ஆனாலும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அப்போது என்னுடைய மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எனக்கு ஆறுதல் அளித்தார்கள்.

என்னுடைய மகள் (நர்மதா) எனது சொந்த தயாரிப்பில் நடிக்க உள்ளார். அவருக்காக நல்ல கதையம்சம் கொண்ட படம் தயாரிப்பேன். அதற்காக நாங்கள் கடினமாக உழைத்து கொண்டிருக்கிறோம். அவர் பாலிவுட்டில் அவருக்குரிய இடத்தை பிடிப்பார் என்பதில் தன்னம்பிக்கையோடு உள்ளார்.

இவ்வாறு கோவிந்தா கூறினார்.

 நர்மதா...

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452