எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, March 02, 2012

சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN)

Print Friendly and PDF


(பஹமுன அஸாம்) 
தற்காலத்தில் புத்தகம் வெளியிடுதல், சஞ்சிகை வெளியடுதல் என்பது இலக்கியத்தில் மலிவாகவே காணப்படுகிறன. இலக்கியத்துறையில் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் நாளுக்கு நாள் பல புத்தகங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இவ்வாறு அறிமுகமாகும் நூல்களுக்கும் சஞ்சிகைகளுக்குமான வாசகர் வட்டம் எவ்வாறானது என்பது கேள்விக்குறிதான்.

எது எப்படியோ இலக்கியத்துக்கு எம்மவர்கள் தம்மாலான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் எனும்போது பெருமையாகத்தான் உள்ளது. இவ்வாறான நூல், சஞ்சிகை வெளியீட்டின்போது ISBN, ISSN இலக்கங்கள் என்பன மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றன. தமிழ், சிங்களம், ஆங்கிலம் எந்த மொழியானாலும், எந்தத் துறையிலான புத்தகம் என்றாலும், பதிப்பாகும் ஒவ்வொரு நூலுக்கும் ISBN இலக்கத்தைப் பெறவேண்டும். அதேபோல் சஞ்சிகையாயின் ISSN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது சர்வதேச குறியீட்டு இலக்கம் என்பதால் வெளியீட்டாளர்கள் இந்த இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளத் தவறுவதில்லை. 

ஆனால், இந்த சர்வதேச நியம நூல் இலக்கத்தைப் பெற்றுக் கொள்வதில் தமிழ் பேசும் மக்கள் பல சிரமங்களை எதிர் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்று ஏகப்பட்ட நூல்களுக்கு சர்வதேச நியம நூல் இலக்கத்தை வழங்கும் தேசிய நூலக ஆவணவாக்கல் திணைக்களத்தில் குறிப்பிட்ட பகுதிக்கு தமிழ் தெரிந்த அதிகாரி ஒருவர் கூட இல்லை. சிங்களம் கதைக்கத் தெரியாதவர்கள் யரேனும் இந்த ISBN இலக்கத்தைப் பெற்றுக் கொள்ள அங்கு சென்றால் பெரும் சிரமம்தான். 

நூலின் பெயர், நூலாசிரியரின் பெயர், வெளியீட்டகத்தின் பெயர் என்பன ISBN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளும்போது முக்கியமாக சமர்ப்பிக்க வேண்டும். இவை ஆங்கிலம் அல்லது சிங்கள மொழியிலே பூர்த்தி செய்ய வேண்டும். எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒழுங்கான தமிழ் சொற்கள் பதிவு செய்யப்படுகின்றனவா என்பது கேள்விக்குறிதான். அவ்விடத்தில் சிங்கள அதிகாரிகள் இருப்பதால் அவர்களுக்கு தமிழ் சொற்கள் எந்தளவுக்கு பரீட்சமானது என்பதும் சந்தேகம் தான்.

எனவே, அந்நிறுவனத்தில் தமிழ் தெரிந்த ஒரு அதிகாரியும் கட்டாயமாக நியமிக்கப்படவேண்டும். இது தமிழ் பேசும் மக்களுக்கு மாத்திரம் செய்யும் உபகாரம் அல்ல. தமிழ் இலக்கிய வழர்ச்சிக்கு செய்யும் பேருதவியாக இருக்கும். தற்போது இணையத்திலும் சர்வதேச நியம நூல் இலக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள முடியுமானதாய் உள்ளது. இது அனேகருக்கு பிரயோசனதாகவே உள்ளது. 

கொழும்புக்கு வெளியே உள்ள ஒருவர் இந்த சர்வதேச நியம நூல் இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால். கொழும்புக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. யாழ்ப்பாணமோ மட்டக்களப்போ அங்கேயே இருந்து கொண்டு ISBN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இணையத்தில் உள்ள PDF வடிவிலான விண்ணப்பப் படிவத்ததை தரவிறக்கம் செய்து அவ்விணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து அனுப்பி தபால் மூலம் சர்வதேச நியம நூல் இலக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

விண்ணப்பப் படிவத்தோடு உரிய தொகையை (100 ரூபா) செலுத்திய காசுக்கட்டளைப் பற்றுச் சீட்டையோ அல்லது வங்கியில் வைப்பிலிட்ட பற்றுச் சீட்டையோ இணைத்து அனுப்புதல் கட்டாயம். சில தினங்கலில் ISBN இலக்கம் தபால் மூலம் வீடு தேடி வரும்.

http://www.natlib.lk/index.php?option=com_content&view=article&id=74:isbn-issn-ismn&catid=39:quick-links

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452