Published On: Friday, March 02, 2012
இலங்கையின் வெற்றியின் மூலம் இந்தியா நாட்டுக்கே நடையைக்கட்டியது

சி.பீ.கிண்ண முத்தரப்பு தொடரின் இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணி 239 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடியது.
அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை மோதும் முத்தரப்பு கிரிக்கட் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
மெல்போர்னில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தது.
இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் ஜெயவர்த்தனே 5 ஓட்டங்களும், தி்ல்சன் 9 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய சங்கக்கரா 64 ஓட்டங்களும், சந்திமால் 75 ஓட்டங்களும், திரிமன்னே 51 ஓட்டங்களும் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தனர்.
சேனநாயக்கா, குலசேகரா ஆகிய இருவரும் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து 239 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது.
அவுஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மேத்யூ வடே 9 ஓட்டங்களும், டேவிட் வார்னர் 6 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய வாட்சன் 65 ஓட்டங்களுடனும், டேவிட் ஹசி 74 ஓட்டங்களுடனும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
அவுஸ்திரேலியா அணி 49.1 ஓவருக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 229 ஓடங்களை மட்டும் பெற்றது .