Published On: Thursday, March 01, 2012
சாதாரணதர பரீட்சையில் 9 A பெற்ற மதுசிகாவுக்கு பாராட்டு
(இன்ஷாப் முஹம்மட்)
கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த ஆண்டு கார்மேல் பத்திமா கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் 9 A சிறப்புச் சித்திபெற்ற மதுசிகா விவேகானந்தராஜாவை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் கல்முனை நகர லயன்ஸ் கழகத் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் லயன் சீமாட்டி இந்திரஜோதி அருள் ஞானமூர்த்தி மாணவிக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைத்தார். தலைவர் லயன் கே.பொன்னம்பலம் மற்றும் லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுநர் சபையின் உப பொருளாளர் லயன் சிவகுரு சண்முகநாதன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.