Published On: Thursday, March 01, 2012
இலங்கைக்கு ஆதரவு தெரிவித்து சம்மாந்துறையில் ஊர்வலம்
(இன்ஷாப் முஹம்மட்)
இலங்கைக்கு எதிராக ஜெனீவா மாநாட்டில் அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொய்க் குற்றச்சாட்டை கண்டித்தும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஏற்பாடுசெய்த எதிர்ப்பு ஊர்வலம் நேற்று புதன்கிழமை சம்மாந்துறை ஹிஜ்ரா ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்து ஹிஜ்ரா சந்திவரை ஊர்வலமாக சென்றன.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் உட்பட சகல பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் பொதுமக்களும் கலந்துகொண்டு தமது எதிப்பை தெரிவித்தனர்.