எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, March 07, 2012

நம்பர்-1 இடத்திற்கான வாய்ப்பு தென் ஆப்ரிக்கவுக்கு அதிகம்

Print Friendly and PDF


நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கும் டெஸ்ட் தொடரை, தென் ஆப்ரிக்க அணி முழுமையாக வெல்லும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் போட்டி இன்று டுனிடினில் நடைபெறுகிறது. சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரை 3-0 என வென்ற தென் ஆப்ரிக்க அணியின் அனைத்து வீரர்களும் நல்ல நிலையில் உள்ளனர். தென் ஆப்ரிக்க அணித்தலைவர் ஸ்மித், ஆம்லா, டிவிலியர்ஸ், காலிஸ், ஸ்டைன் போன்றோர் அணிக்கு நிச்சயம் பலத்தை சேர்ப்பர்.

அதே நேரம் ஜிம்பாப்வேக்கு எதிராக சொந்தமண்ணில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் இமாலய வெற்றி பெற்ற உற்சாகத்தில் நியூசிலாந்து அணி உள்ளது. இருப்பினும் கப்டில், நிக்கோல், இன்று அறிமுகமாகும் வான் விக் ஆகியோரது அனுபவமின்மை சிக்கல் தான்.

தற்போது டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து(118 புள்ளி), தென் ஆப்ரிக்கா(117 புள்ளி), இந்திய(111 புள்ளி) அணிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.

மூன்று போட்டிகள் கொண்ட நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்க அணி முழுமையாக வென்றால் 119 புள்ளிகள் பெற்று நம்பர்-1 இடத்தை பிடிக்கலாம்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452