எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, March 04, 2012

விரைவில் தேனிலவுக்கு செல்லும் ஜெனிலியா-ரித்தேஷ்

Print Friendly and PDF


திருமண பந்தத்தில் சமீபத்தில் இணைந்திருக்கும் திரை ஜோடி ஜெனிலியா- ரித்தேஷ் தேஷ்முக்குடன் ஒரு சந்திப்பு...

புதிதாகத் திருமணமானவர்கள் ஓர் இடைவேளை எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். ஆனால் நீங்கள் எப்போதும்போல் பிசியாய் இருக்கிற மாதிரி தெரிகிறதே?

ஜெனிலியா: எங்களுக்கு இதைவிட்டால் வேறு வேலையில்லை.

ரித்தேஷ்: எனக்கு இடைவேளை எடுத்துக்கொள்ள விருப்பம்தான். ஆனால் தற்போது, நாங்கள் இணைந்து நடித்துள்ள படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியில் இறங்கி யிருக்கிறோம். இருவரும் சேர்ந்து இப்பணியை மேற்கொள்வதால், பிரிந்திருக்கிறோம் என்ற பேச்சுக்கு இடமில்லை.

திருமணத்துக்கு முன் கிசுகிசுக்களை நீங்கள் எவ்வாறு கையாண்டீர்கள்?

ஜெனிலியா: பாருங்கள், அவையெல்லாம் அர்த்தமற்றவை. கடைசியில் மடிந்துதான் போகும். அவை வதந்திகள் என்பதால் நீடித்திருப்பதற்கு வழியில்லை. திரைத்துறையில், நீங்கள் ஒருவருடன் பேசினாலே அதை ஒரு கதையாக்கிவிடுவார்கள்.

ரித்தேஷ்: நாங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதுதான் மிகவும் முக்கியம். அப்படிப் புரிந்துகொள்கிறபோது மற்றவையெல்லாம் விஷயமே அல்ல. எனது செக்ஸ் ஆர்வம் குறித்து கூடத்தான் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினார்கள். அது குறித்து பேட்டிகளிலும் கூட கேள்வி எழுப்புவார்கள். என்ன செய்யறது? உதாரணத்துக்கு, `நீங்க எந்தப் பெண்ணையாவது காதலிக்கிறீங்களா?'ன்னு கேட்பாங்க. நான் `இல்லை' என்பேன். 

உடனே, `ரித்தேஷ் ஓர் ஓரினச் சேர்க்கையாளர்'னு எழுதிவிடுவார்கள். ஆரம்பத்தில் இது என்னை வருத்தப்படுத்தியது உண்மை. `நீங்கள் ஓரினச்சேர்க்கையாளரா?' என்று என்னை முதன்முதலில் கேள்வி கேட்டவர் ஒரு இதழின் பெண் நிருபர். அவர் அப்படிக் கேட்டதுமே நான் அதிர்ச்சியாகிவிட்டேன். என்ன சொல்வது? `இல்லை' என்றேன். பின்னர் வெளிவந்த கட்டுரையின் தலைப்பு- `இல்லை... நான் ஓரினச் சேர்க்கையாளன் இல்லை.'

நீங்கள் அதை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?

ஜெனிலியா: (சிரிக்கிறார்) இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் நான் ரொம்ப `கூல்'. இதெல்லாம் மடத்தனமானவை. நான் சொல்கிறேன், ரித்தேஷ் ஓரினச்சேர்க்கையாளர் அல்ல.

ரித்தேஷ்: இவள் இப்படித்தான்... நீங்கள் ஓரினச் சேர்க்கையாளர் அல்ல என்று நான் அறிக்கை வெளியிடட்டுமா என்று கேட்பாள்!

இப்படி பிரச்சினைகள் ஏற்படுவதால், நீங்கள் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்கிறீர்களா?

ரித்தேஷ்: நான் ரொம்ப கவனமாகத்தான் பேசுகிறேன். தற்போது `டுவீட்டரில் ' எழுதுகிறேன். நடிகன் என்பதால் நான் சொல்வதெல்லாம் வெளிச்சமிடப்படுகிறது. எனவே எனது `டுவீட்'கள் எல்லாம் பொதுவானதாகத்தான் இருக்கும்.

தேனிலவு எப்போது?

இருவரும்: அனேகமாக விரைவிலேயே இருக்கும்!

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452