Published On: Sunday, March 04, 2012
துப்பாக்கியில் அரை நிர்வாணமாக நடிக்க காஜல் மறுப்பு

துப்பாக்கி படத்தில் அரை நிர்வாண காட்சியில் நடிக்க காஜல் அகர்வால் மறுத்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்கில இதழுக்காக அரை நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் காஜல் அகர்வால். அவர் இப்போது விஜய் ஜோடியாக துப்பாக்கி படத்தில் நடிக்கிறார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தில், கதைக்கு தேவை என்பதால் ஆங்கில இதழுக்கு போஸ் கொடுத்தது போன்று ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என முருகதாஸ் கேட்டதாகவும் ஆனால் காஜல் மறுத்துவிட்டதாகவும் கோடம்பாக¢கத்தில் தகவல் பரவியுள்ளது. ஏற்கனவே காஜல் அளித்த போஸ் காரணமாக, அவருக்கு மகளிர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இந்தி சினிமா வாய்ப்பை பெறும் வகையில் காஜல் அவ்வாறு போஸ் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அதுபோல் படத்திலே நடித்தால் தனது இமேஜ் பாதிக்கும் என்பதால் காஜல் அத்தகைய காட்சியில் நடிக்க மறுத்ததாக தெரிகிறது. இது பற்றி காஜலின் அம்மா வினைய் கூறுகையில், காஜலை பற்றி இயக்குனர் முருகதாஸுக்கு நன்றாக தெரியும். அவள் எப்படிப்பட்ட வேடங்களில் நடித்து வருகிறாள். எப்படி நடிப்பாள் என்பதை அவர் தெரிந்து வைத்திருக்கிறார். அப்படி இருக்கும்போது இது போன்ற ஒரு காட்சியில் அவர் நடிக்க கேட்டதாக வரும் தகவலில் உண்மை இல்லை என்றார்.