Published On: Monday, March 05, 2012
புதிய மாகாணசபை உறுப்பினரை வரவேற்கும் நிகழ்வுகள்

(புத்தளம் செய்தியாளர்)
வடமேல் மாகாண ஆளுநர் முன்னிலையில் புதிய மாகாணசபை உறுப்பினராக பதவி ஏற்ற சட்டத்தரணி ஏ.ஏம். கமறுதீனுக்கு புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் தலைமையில் புத்தளத்தில் இன்று மாலை வரவேற்பளிக்கப்பட்டது. புதிய உறுப்பினர் சட்டத்தரணி ஏ.ஏம். கமறுதீன் புத்தளம் நகரினூடாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ. பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற ஊர்வலத்தில் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அத்துடன் புதிய மாகாணசபை உறுப்பினரை வரவேற்கும் பொதுக் கூட்டம் இன்று இரவு புத்தளம் நகரில் நடைபெற்றது. இப் பொதுக்கூட்டத்தில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டீ.எம்.தாஹிர், ஏ.எச்.எம். ரியாஸ், சிந்தக மாயாதுன்ன, எஸ்.ஏ. எஹ்யா உட்பட நகரசபை, பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

