Published On: Monday, March 05, 2012
(இன்ஷாப் முஹம்மட்)
அபிவிருத்திப் பணிகள் காடு, மேடுகள் எங்கும் முடுக்கிவிடப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் கட்டாக் காலிகளின் சரணாலயமாகக் காணப்படும் சம்மாந்துறை பிரதான தபலகம் மூன்று தசாப்த காலமாக எந்தவித அபிவிருத்திகளும் இல்லாமல் உடைந்த பாதுகாப்பற்ற பழைய கட்டிடம் ஒன்றில் இயங்குவதையிட்டு இப்பிரதேச மக்கள் வேதனையும் கவலையும் அடைந்துள்ளனர்.
சம்மாந்துறை பிரதான தபாலகம் அம்பாரை மாவட்டத்தில் அதிகூடிய சனத்தொகையினையும் நிலப்பரப்பையும் கொண்டிருப்பதுடன் ஒன்பது உப தபாலகங்களை நிர்வாகித்து வருகின்ற ஒரு பிரதான தபாலகம் ஏனைய சில பிரதேசங்களில் காணப்படும் உப தபாலகங்களையும் விடவும் அடிப்படை வசதிகளற்ற நிலையில் சுற்று வேலிகள் கூட இல்லாமல் கட்டாக் காலிகளின் சரணாலயமாகக் காட்சி தருகின்றது.
இந்நிலமையினை அறிந்திருந்தும் தபால் திணைக்களம் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருந்து வருவது இப்பிரதேசத்தை புறக்கணிக்கின்ற ஒரு செயலாக கருதுவதாக இப்பிராந்திய மக்களும், பொதுநல அமைப்புக்களும் கவலை தெரிவிக்கின்றனர். இத் தபாலகத்தின் இன்றைய நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் காணலாம்.