எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Tuesday, March 06, 2012

மாலை 6.30 முதல் இரவு 9.30 வரை மின் பாவனைக் குறைப்பு அவசியம்

Print Friendly and PDF


மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 வரையில் மின்சார பாவனைக்காக 2000 மெகாவாற் சக்தி மின்சாரம் செலவிடப்படுகின்றது. இந்த மின்சாரம் அதிகமாக விரயமாகும் 3 மணித்தியாலங்களின் போது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மின்குமிழை அனைத்துவிட்டால் அதன் மூலம் 250 மெகாவாற் மின்சார சக்தியை சேமிக்க முடியும்.

இந்த 3 மணித்தியாலங்களில் ஒரு அலகு மின்சாரத்தை தயாரிப்பதற்கு 60 ரூபா செலவிடப்படுகின்ற போதும், இந்த ஒவ்வொரு அலகையும் பாவனையாளர்களுக்கு மின்சார சபை 16 ரூபாவுக்கு விற்பனை செய்து பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கிறது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாடெங்கிலும் உள்ள பாவனையாளர்கள் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை வீடுகளில் ஓரிரு மின்குமிழ்களை மாத்திரம் ஒளிரச் செய்து, தொலைக்காட்சி பெட்டிகளை மாத்திரம் செயற்படுத்தினால் பெருமளவு மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452