Published On: Sunday, March 04, 2012
மலையாள பட அதிபர் மீது ஸ்ரேயா புகார்

மலையாள பட அதிபர் ஒருவர் மீது நடிகை ஸ்ரேயா தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறார். பட அதிபர் மீது வழக்கு தொடரவும் ஸ்ரேயா முடிவு செய்திருக்கிறார்.
மம்முட்டி, பிருதிவிராஜ், ஸ்ரேயா ஆகியோர் நடித்து, சமீபத்தில் திரைக்கு வந்த மலையாள படம், போக்கிரி ராஜா.' ரியாஸ்கான், சரண்ராஜ், காதல் தண்டபாணி, நெடுமுடி வேணு ஆகியோரும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள்.
கதைப்படி, மம்முட்டியும், பிருதிவிராஜ×ம் அண்ணன்-தம்பி. பிருதிவிராஜ×ம், ஸ்ரேயாவும் காதலர்கள். இவர்களின் காதலை சேர்த்து வைக்க மம்முட்டி நடத்தும் போராட்டம்தான் கதை.
`போக்கிரி ராஜா' (மலையாள) படத்தை தயாரித்தவர், தாமஸ் ஆன்டனி. இவர் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில், நடிகை ஸ்ரேயா புகார் செய்திருக்கிறார். இதுபற்றி, ஸ்ரேயா கூறியதாவது:-
``போக்கிரி ராஜா (மலையாள) படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொள்ளும்போது, இந்த படத்தை வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன்தான் நடிக்க சம்மதித்தேன். அதற்கான ஒப்பந்தத்தில் நானும், பட அதிபர் தாமஸ் ஆன்டனியும் கையெழுத்திட்டு இருக்கிறோம்.
அந்த ஒப்பந்தத்தை தாமஸ் ஆன்டனி மீறி விட்டார். இதுபற்றி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறேன்.
`போக்கிரி ராஜா' படத்தை தமிழ் உள்பட வேறு எந்த மொழிகளிலும் `டப்' செய்து வெளியிட தடை விதிக்கக் கோரி, கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்திருக்கிறேன்.''
இவ்வாறு நடிகை ஸ்ரேயா கூறினார்.