Published On: Saturday, March 03, 2012
'கிறிஸ் கெய்ல்' மீண்டும் புறக்கணிக்கப்பட்டார்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகள் அணியில் கிறிஸ் கெய்லுக்கும் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த உலக கிண்ணத் தொடரில் இருந்தே, மேற்கிந்திய தீவுகள் அணியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார் அதிரடி தொடக்க வீரர் கெய்ல். இதையடுத்து அணித் தெரிவு குழுவினருடன் மோதல் ஏற்பட்டது.
பின் ஒருவழியாக சமாதானம் ஏற்பட்டாலும், தெரிவாளர்கள் குறித்து தான் வெளியிட்ட கருத்தை கெய்ல் திரும்ப பெற மறுத்தார். இதனால் இவரை அணியில் சேர்க்க நிர்வாகம் மறுக்கிறது.
இந்நிலையில் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக 17 ஒப்பந்த வீரர்கள் உட்பட 30 பேர் கொண்ட தற்காலிக அணி அறிவிக்கப்பட்டது.
இதில் சந்தர்பால், டேரன் பிராவோ, சமி, ஆன்ட்ரூ ரசல், சாமுவேல்ஸ், டுவைன் பிராவோ, போலார்டு, ராம்தின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த உத்தேச அணியில் கெய்ல் மீண்டும் சேர்க்கப்படவில்லை. இதே போன்று ராம்பால் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.