Published On: Sunday, March 04, 2012
லண்டனில் ஷாருக்கானிடம் பொலிஸார் திடீர் விசாரணை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானிடம், லண்டன் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். யாஷ் சோப்ராவின் புதிய படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக காத்ரீனா கைப் மற்றும் அனுஷ்கா சர்மா நடிக்கிறார்கள். படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஷாருக்கானிடம், லண்டன் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் இதில் எந்த பரபரப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது படம் குறித்த எந்தத் தகவலும், புகைப்படமும் வெளியாகி விடக்கூடாது என்று படக் குழுவினர் கவனமாக உள்ளனராம். இதற்காக, பாதுகாப்பு கோரி லண்டன் பொலிஸாரை அணுகியுள்ளனர். இதையடுத்து லண்டன் பொலிஸார் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனராம். அதன் ஒரு கட்டமாகவே ஷாருக்கானையும் விசாரித்துள்ளனராம். ஆனால் அவர்தான் படத்தின் ஹீரோ என்று தெரிய வந்து பிறகு விட்டு விட்டார்களாம்.
இதற்கு முன்பு நியூயார்க் விமான நிலையத்தி்ல ஷாருக்கானை பல மணி நேரம் பொலிஸார் விசாரித்தது பெரும் பரபரப்பானது. அவரது பெயரில் கான் என்று இருந்ததால் இந்த விசாரணை நடந்தது. இப்போது லண்டன் பொலிஸார் பீதியை ஏற்படுத்தியுள்ளனர்.

