எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Thursday, March 01, 2012

கதாநாயகிகள் திரையைவிட நிஜத்தில் அபாரம்

Print Friendly and PDF


நான் டாக்டராகியிருப்பேன்... சினிமாவுக்கு வந்தது விபத்து என்றும், டூப்பே போடாமல் சாகஸக் காட்சிகளில் நடித்தேன் என்றும் அவர்கள் சொல்லும்போது முன்பெல்லாம் நம்புவது போலவே ஒரிஜினலாக இருக்கும். இப்போது ரசிகர்கள் தெளிவாகிவிட்டார்கள். பேராண்மையில் ஐந்தில் ஒரு ஹீரோயினாக வந்து, இப்போது அரவானில் சோலோவாகிவிட்ட தன்ஷிகா பிழைக்கத் தெரிந்தவர். வாய் ரொம்பவே அதிகம். வாய்க்கு வந்ததை அடித்துவிடுவதில் இவர் பேராண்மை மிக்கவர்தான்.

நாளை ரிலீசாக இருக்கும் அரவானில் நடித்தது குறித்து நிருபர்களிடம் அவர் பேசும்போது, வசந்தபாலனை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார். வசந்தபாலன் டைரக்ஷனில் ஒரே ஒரு படத்தில் நடித்தால் போதும். விருது வாங்கிடலாம் என்றார். (அடுத்த படத்துக்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்துவிட்டார் போலிருக்கிறது) அடுத்து அவர் சொன்னதெல்லாம் அரவானில் காமெடி குறைவாக இருக்குமோ என எண்ணத் தூண்டியது.

இதோ ஒரு சாம்பிள்: "அரவான் படத்தில் நான் பல சவாலான காட்சிகளில், துணிச்சலுடன் நடித்தேன். 30 அடி உயரத்தில் இருந்து குதித்து இருக்கிறேன். ஒகேனக்கல் மலையில் இருந்து கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் குதித்து `டூப்' போடாமல் குதித்திருக்கிறேன்... இந்த மாதிரி வேடங்களில் நடிக்கவே ஆசை. நிச்சயம் சூப்பர் ஸ்டாரிணி அந்தஸ்தைப் பெறுவேன்...," என அருள் வராத குறையாக ஆவேசப்பட்டார் அம்மணி!

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452