Published On: Thursday, March 01, 2012
மன்னார் சந்தைக் கட்டடத்தில் தீவிபத்து; 45 கடைகள் சேதம்

மன்னார் நகரசபைக்கு சொத்தமான சந்தை கட்டடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் சந்தையிலுள்ள 45 கடைகள் வரை முற்றாக எரிந்து சேதமாகியுள்ளன. இத்தீவிபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இதனால் ஏற்பட்டுள்ள சேதவிபரங்கள் இதுவரை கணிப்பிடப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். எனினும், இத் தீவிபத்தினால் அப்பகுதியிலுள்ள எவருக்கும் காயங்களோ, உயிராபத்தோ ஏற்படவில்லை.

